மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி ஆண்டு முழுவதும் அனைத்து பள்ளி இருபால் மாணவர்களிடம் கொண்டு செல்ல முடிவெடுத்து அதன்படி 18 மார்ச் 2015 இன்று வரை தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட பதினாறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது.நாளை அதாவது 19 மார்ச் 2015 வியாழக்கிழமை காலை10.00மணிக்கு ஊத்துக்குளிRS ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி வழங்க உள்ளோம்.திருமிகு.பூபாலன் அவர்கள் தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளி மாணாக்கருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.அதுவும் இந்த ஆண்டே கொடுக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான அழைப்பின்பேரில் செல்கிறேன்.
தலைமை ஆசிரியர் அவர்கள் தம் பள்ளி மீது இவ்வளவு ஆர்வமுள்ளபோது நாமும் அவருக்கு ஊக்கமளிப்போம்.என்ற எண்ணத்தின்பேரில்.........
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி கொடுக்கலாமா?
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடிவினா நடத்தலாமா?அதாவது அனைத்து மாணவர்களையும் குழுக்களாக பிரித்து கேள்வி கேட்டு விழிப்புணர்வு கொடுப்பது.
போக்குவரத்து சம்பந்தமான அனைத்தும் தன் பயனை.கூறுவது போன்ற கலைநிகழ்ச்சி நடத்தலாமா?உதாரணமாக (1)நெடுஞ்சாலை தன் இயல்பைக்கூறி பாதுகாப்பாக பயன்படுத்துங்க என்று கூறுவது.
(2)நெடுஞ்சாலைக்கு துணையாக இருக்கும்போக்குவரத்து சின்னங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் பயனை எடுத்துக்கூறுவது..
(3)சாலை வரைகோடுகள் அவற்றின் பயனை எடுத்துக்கூறுவது
(4)பயணிகள் வாகனம் பேசுவது போல கருத்துரை வழங்குவது
(5)விளக்கு சிக்னல் தன் உதவி பற்றி கூறுதல்
(6)போக்குவரத்து காவலர் தன் உதவியும் கடமையும் பற்றி கூறுவது.
(7)ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் பேசுவது போன்ற நிகழ்வு,
(8)பொதுப்பணி ஓட்டுநர் அதாவது தொழில் சார்ந்த ஓட்டுநர் தம் பொறுப்பும் கடமையும் பற்றி பேசுவது,
(9)சொந்த வாகன ஓட்டிகள் அதாவது தொழில் சாராத ஓட்டிகள்
(நிறுவன அதிபர்கள்,தொழிற்சாலை பணியாளர்கள் ,மருத்துவர்,வழக்கறிஞர்,மக்கள் பிரதிநிதிகள்,கல்வியாளர்கள்,சான்றோர்கள்,போன்ற பல்வேறு தொழில்களை செய்பவர்கள் தமது தேவைக்கு மட்டும் இரு சக்கர வாகனம் முதல் சொந்தக்கார் போன்ற தம்முடைய போக்குவரத்து தேவைக்காக வாகனம் ஓட்டுபவர்கள்)பொதுச்சாலையில் வாகனம் ஓட்டும்போது சாலை அனைவருக்கும் பொதுவானது.சாலை விதிகள் அனைவரும் மதிக்க வேண்டும்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற விழிப்புணர்வை கொடுப்பது போன்ற நிகழ்வு,
(10)அவசர உதவி வாகனம் ஆம்புலன்ஸ்108 பேசுவது போன்ற நிகழ்ச்சி,
(11)சுற்றுச்சூழல் பேசுவது
(12)நடையும் மிதிவண்டியும் பேசுவது,
(13)வேகத்தடை பேசுவது,வேகக்கட்டுப்படுத்தி(SPEED HUMPS & TRAFFIC BARRIERS)
(14)பாதசாரிகள் நடைபாதை பேசுவது
என நாடக வடிவில் விழிப்புரை கொடுக்கலாமா? என திட்டமிட்டு வருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக