வியாழன், 26 மார்ச், 2015

சாலை வரைகோடுகள் - ROAD MARKING TIPS


மரியாதைக்குரியவர்களே,
         வணக்கம்.சாலை வரைகோடுகள் பற்றிய விளக்கங்கள் இணையதளத்தில் கிடைக்காதது வருத்தம் அளிக்கிறது.இனிவருங்காலங்களில் நெடுஞ்சாலை வரைகோடுகளும் அவற்றை பயன்படுத்தும் முறைகளும் பற்றி பதிவிட உள்ளேன்.இருப்பினும் தங்களுக்காக இப்போதைக்கு இதோ.
நீங்கள் யாரிடம் வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்கிறீர்கள்..
 ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியா? 
அப்பாவிடமா?
 அம்மாவிடமா? 
மற்றவர்களிடமா? 
நீங்களே கற்றுக்கொள்கிறீர்களா?
 
     கீழ்கண்ட படங்கள் மாற்றி தெளிவாக பதிவிடப்படும் வரை பொறுமை காக்கவும்.






விளக்கு சைகைகள்-இந்தியாவில்????????

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.விளக்கு சைகைகள் பற்றி இங்கு காண்போம்.
 பச்சை விளக்கு எரிந்தால்
   மற்ற நாடுகளில் செல்கிறார்கள்.இந்தியாவிலும் செல்கிறார்கள். 
ஆனால்
ஆரஞ்சு விளக்கு எரிந்தால்  
              மற்ற நாடுகளில் நிறுத்து கோட்டை தாண்டியவர்கள் தவிர மற்றவர்கள் நிறுத்து கோட்டை விட்டு தள்ளி நிற்கிறார்கள். 
        இந்தியாவில் வேகமாக செல்கிறார்கள்.தவறாக ஓட்டுகிறார்கள்
சிவப்பு விளக்கு எரிந்தால்  
மற்ற நாடுகளில் நிறுத்து கோட்டிலிருந்து தள்ளி நிற்கிறார்கள். 
              இந்தியாவில் காவலர் ஒருவரும் இல்லையென்றால் மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் செல்கிறார்கள் அதாவது தவறாக ஓட்டுகிறார்கள்..


சாலை பாதுகாப்பு கல்வி-சத்தியமங்கலம்

மரியாதைக்குரியவர்களே,
          வணக்கம்.சாலை பாதுகாப்பு கல்வி கற்றுக்கொள்ளுங்க..குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்க.சாலைக்கு அழைத்துச்செல்லுங்க.போக்குவரத்து நடைபெறும் விதத்தை செயல்வடிவில் கற்றுக்கொடுங்க..

 வாகன ஓட்டிகள் தங்களுக்கு பின்னால் வரும் பிற சாலை பயனாளிகளுக்கு தன் நிலை பற்றி சைகை செய்து உணரச்செய்தல்....
(1) நான் வலது பறம் திரும்புகிறேன்.
(2)நான் இடது புறம் திரும்புகிறேன்.
(3)நான்  வேகத்தைக் குறைக்கிறேன் அல்லது வாகனத்தை நிறுத்துகிறேன்.
          


ஓட்டுநர் உரிமம் எடுப்பது எப்படி?

மரியாதைக்குரியவர்களே,
 வணக்கம்.சாலை பாதுகாப்பு கல்வி வலைப்பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.


                ‘உரிய வாகனம் ஓட்டும் உரிமம்  இல்லாமல் வாகனம் ஓட்டுவது நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பல விதங்களில் நமக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்’
  பழகுநர் உரிமம் எடுக்க (LLR) குறைந்தபட்ச தகுதிகள் என்ன?
உங்களுக்குப் பதினாறு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு குறைவான கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கு லைசென்ஸ் பெறலாம். பதினெட்டு வயது முடிந்திருந்தால், 50 சிசி&க்கு மேற்பட்ட கியர் வாகனங்கள்(மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள்) , இலகு ரக (கார், ஜீப்) வாகனங்கள் ஓட்ட லைசென்ஸ் பெறலாம். இருபது வயது முடிந்திருந்தால், இலகு ரக போக்குவரத்து வாகனங்கள்(வாடகை கார், ஆட்டோ, வேன்) ஓட்ட லைசென்ஸ் பெறலாம்.
என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
1. முகவரி ஆதாரம் (உ&ம்: குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட்).
2. வயது ஆதாரம் (உ&ம்: பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பாஸ்போர்ட்).
3. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகள். அதோடு படிவம் & 1 (இந்தப்படிவத்தில் ‘அ’ இணைப்பில் அரசு பதிவு பெற்ற மருத்துவர் ஒருவர் உங்களைப்பரிசோதித்து, ‘நீங்கள் வாகனம் ஓட்டத் தகுதியானவர்தான்’ எனச் சான்றளிக்கவேண்டும்), மற்றும் படிவம் & 3 (இரண்டு பிரதிகள் இணைக்கப்படவேண்டும்.).
ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் மட்டும் படிவம் 14 இணைக்கப்பட வேண்டும். இந்தப் படிவங்களை நிரப்பி, ரூ.30/& செலுத்தி பழகுநர் உரிமம் (LLR) பெற்றுக்கொள்ளலாம். இந்த உரிமத்தை ஆறு மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். அதன் பிறகு, ஓட்டுநர்
உரிமம்(Driving licence) லிவீநீமீஸீநீமீ) பெற கண்டிப்பாக நேரில் ஆஜராக
வேண்டும். பழகுநர் உரிமம் பெற அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஆகலாம்.
ஓட்டுநர் உரிமம் பெற என்ன செய்ய வேண்டும்?
பழகுநர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகு ஓட்டுநர் உரிமம் பெற
விண்ணப்பிக்கலாம். அதற்கு படிவம் 4&ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்
(ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் பயில்பவராக இருந்தால் படிவம் 5 இணைக்க
வேண்டும்).
மேலும், இத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பழகுநர் உரிமம்,
2. வாகனத்துக்கான ஆவணங்கள் (பதிவுச் சான்றிதழ், இன்ஷ¨ரன்ஸ்),
3.பிறருடைய வாகனமாக இருந்தால், அத்தாட்சிக் கடிதம்,
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
இவற்றுடன் உரிமம் வழங்க ரூ. 200&ம் தேர்வுக் கட்டணமாக ரூ.50&ம் செலுத்த வேண்டும்.
எவ்வாறு பரீட்சை நடைபெறுகிறது?
வாகனம் ஓட்டவும் சாலை விதிகளும் கற்றுக்கொண்ட பிறகு, வாகன ஆய்வாளர் முன்பு இரு சக்கர வாகனம் என்றால் 8 போன்ற வளைவுச் சுற்றுக்குள் ஓட்டிக் காட்ட வேண்டும். (இது உரிமம் வழங்கும் வழிகாட்டுதல் விதியின்படி 8 போன்ற வளைவுக்குள் ஓட்டினாலே அனைத்துவிதமான பரிசோதனைகளும் அடங்கிவிடுவதால், இதில் ஓட்டிக் காட்ட கூறப்படுகிறது) இலகு ரக வாகனம் என்றால், ஆய்வாளர் அருகில்
அமர்ந்திருக்க, சாலையில் அனைத்து கியர்களிலும் நாம் சரியாக ஓட்டிக்
காட்டினால் ஆய்வாளர் உரிமம் வழங்க பரிந்துரைப்பார். அதன் பின்னர்தான்
உரிமம் வழங்கப்படும். இந்தத் தேர்வின்போது வளைவுகளில் திரும்பும்போது, நிறுத்தும்போது உரிய சைகைகள் செய்கிறீர்களா என ஆய்வாளர் கவனிப்பார். சரியாகச் சைகைகள் செய்தால்தான் உரிமம் கிடைக்கும். இதில் தோல்வி அடைந்தால், போக்குவரத்து விதிகளைக் கற்றுக்கொண்டு 15 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஓட்டிக் காட்டிதான் உரிமம் பெற முடியும்.
வேறு ஊருக்கு மாற்றலாகிச் செல்பவர்கள், ஓட்டுநர் உரிமத்தை எவ்வாறு புதிய முகவரிக்கு மாற்றுவது?
உதாரணத்துக்கு சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்றலாகிப் போகிறீர்கள் என்றால், திருச்சியில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேராகச் சென்று பழைய உரிமத்தைக் கொடுத்துவிட்டு புதிய விலாசம் கொண்ட உரிமத்தை வாங்க முடியாது.
விலாசம் மாற்றப்பட்ட புதிய உரிமத்துக்கு விண்ணப்பிப்பதற்கே உங்களுக்கு பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஒரு சான்றிதழ் தேவைப்படும்
உங்கள் பழைய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு மனு ஒன்றை எழுதி, அத்துடன் உங்கள் உரிமத்தின் நகலையும் இணைத்து, சுய விலாசமிட்ட உறையுடன் அனுப்ப வேண்டும். மனுவில் நீங்கள் தற்போது மாற்றலாகிப் போயிருக்கும் ஊரின் முகவரி, அது எந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகச் சரகத்தில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட வேண்டும். உங்கள் மனுவை பரிசீலித்து பதிவேடுகளில் உங்கள் உரிம நகலை ஒப்பிட்டுப் பார்த்து ‘உண்மையான உரிம நகல்தான்’ என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சான்றிதழ் வழங்குவார். அதை உங்களுக்கு
அனுப்பி வைப்பார். அந்தச் சான்றிதழுடன் தற்போது வசிக்கும் இருப்பிடச்
சான்றையும், ஒரிஜினல் உரிமத்தையும் இணைத்து புதிய ஊரில் இருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தால், முகவரி மாற்றப்பட்ட புதிய உரிமம் கொடுப்பார்கள்.
உரிமம் புதுப்பிக்காமல் பல ஆண்டுகள் ஆகியிருந்தால் மீண்டும் புதிதாகத்தான் எடுக்க வேண்டுமா?
இல்லை. வருடத்துக்கு 50 ரூபாய் வீதம் அபராதம் செலுத்தினால் புதுப்பித்துத் தரப்படும்.
உரிமம் புதுப்பிக்காமல் இருக்கும்போது, வாகனம் ஓட்டி விபத்து நேர்ந்தால், சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?
உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை அது செல்லுபடியாகும். அதற்குப்பின்னர், உரிமம் இல்லாமல் ஓட்டினால் கோர்ட் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கைதான் இதற்கும் பொருந்தும். உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில்
சிக்கல் ஏற்படும். உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
ஆகவே, உரிமம் இல்லையென்றால் வாகனம் ஓட்டாமலிருப்பது பொதுமக்களுக்கும், ஓட்டுபவருக்கும் நல்லது.
அசல் உரிமம் தொலைந்து போனால், வேறு புதிய உரிமம் எடுக்கலாமா?
கூடாது. ஏனென்றால், தொலைந்துபோன உங்கள் உரிமத்தை வேறொருவர் தவறாக உங்கள் பெயரில் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், உங்கள் உரிமம் எப்போது, எங்கு தொலைந்துபோனது என்பதைக் குறிப்பிட்டு காவல் நிலையத்தில் புகார் தரவேண்டும். இந்த புகாருடன் தொலைந்து போன உங்கள் உரிமத்தின் நகலையும் இணைக்க வேண்டும். அவர்கள் அது உண்மைதானா என்று ஊர்ஜிதம் செய்துகொண்டு தேடிப்பார்ப்பார்கள். அது கிடைக்கவில்லை என்றால், உங்களுக்கு ‘நகல் உரிமம்’ தர பரிந்துரை செய்து சான்றிதழ் கொடுப்பார்கள். போக்குவரத்து அலுவலகத்தில் பதிவேடுகளில் இருக்கும் உங்கள் புகைப்படத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிசெய்துகொண்டு நகல் உரிமம் வழங்குவார்கள்.
உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?
சொந்த வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் அதிகபட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லுபடியாகும். அதாவது அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.
 தொழில்சார் ஓட்டுநர்களுக்கு அதாவது சீருடை அணிந்த ஓட்டுநர்களுக்கு  மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.  ஒவ்வொரு முறையும்
புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மனநிலை மற்றும்
உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் ‘என் மனநிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது’ என ஒப்புதல் அளிக்க வேண்டும்.
 

புதன், 18 மார்ச், 2015

சாலை பாதுகாப்பு கல்வி -2015


மரியாதைக்குரியவர்களே,
               வணக்கம்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி ஆண்டு முழுவதும் அனைத்து பள்ளி இருபால் மாணவர்களிடம் கொண்டு செல்ல முடிவெடுத்து அதன்படி 18 மார்ச் 2015 இன்று வரை தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட பதினாறு பள்ளிகளில் சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு  கொடுக்கப்பட்டுள்ளது.நாளை அதாவது 19 மார்ச் 2015 வியாழக்கிழமை காலை10.00மணிக்கு ஊத்துக்குளிRS ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி வழங்க உள்ளோம்.திருமிகு.பூபாலன் அவர்கள் தலைமை ஆசிரியர் அவர்கள் பள்ளி மாணாக்கருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.அதுவும் இந்த ஆண்டே கொடுக்க வேண்டும் என்ற தொடர்ச்சியான அழைப்பின்பேரில் செல்கிறேன்.
தலைமை ஆசிரியர் அவர்கள் தம்  பள்ளி மீது இவ்வளவு ஆர்வமுள்ளபோது நாமும் அவருக்கு ஊக்கமளிப்போம்.என்ற எண்ணத்தின்பேரில்.........
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி கொடுக்கலாமா?
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடிவினா நடத்தலாமா?அதாவது அனைத்து மாணவர்களையும் குழுக்களாக பிரித்து கேள்வி கேட்டு விழிப்புணர்வு கொடுப்பது.
போக்குவரத்து சம்பந்தமான அனைத்தும் தன் பயனை.கூறுவது போன்ற கலைநிகழ்ச்சி நடத்தலாமா?உதாரணமாக (1)நெடுஞ்சாலை தன் இயல்பைக்கூறி பாதுகாப்பாக பயன்படுத்துங்க என்று கூறுவது.
(2)நெடுஞ்சாலைக்கு துணையாக இருக்கும்போக்குவரத்து சின்னங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் பயனை எடுத்துக்கூறுவது..
(3)சாலை வரைகோடுகள் அவற்றின் பயனை எடுத்துக்கூறுவது
(4)பயணிகள் வாகனம் பேசுவது போல கருத்துரை வழங்குவது
(5)விளக்கு சிக்னல் தன் உதவி பற்றி கூறுதல்
(6)போக்குவரத்து காவலர் தன் உதவியும் கடமையும் பற்றி கூறுவது.
(7)ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் பேசுவது போன்ற நிகழ்வு,
(8)பொதுப்பணி ஓட்டுநர் அதாவது தொழில் சார்ந்த ஓட்டுநர் தம் பொறுப்பும் கடமையும் பற்றி பேசுவது,
(9)சொந்த வாகன ஓட்டிகள் அதாவது தொழில் சாராத ஓட்டிகள்
 (நிறுவன அதிபர்கள்,தொழிற்சாலை பணியாளர்கள் ,மருத்துவர்,வழக்கறிஞர்,மக்கள் பிரதிநிதிகள்,கல்வியாளர்கள்,சான்றோர்கள்,போன்ற பல்வேறு தொழில்களை செய்பவர்கள் தமது தேவைக்கு மட்டும்  இரு சக்கர வாகனம் முதல் சொந்தக்கார் போன்ற தம்முடைய போக்குவரத்து தேவைக்காக வாகனம் ஓட்டுபவர்கள்)பொதுச்சாலையில் வாகனம் ஓட்டும்போது சாலை அனைவருக்கும் பொதுவானது.சாலை விதிகள் அனைவரும் மதிக்க வேண்டும்.சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்ற விழிப்புணர்வை கொடுப்பது போன்ற நிகழ்வு,
(10)அவசர உதவி வாகனம் ஆம்புலன்ஸ்108 பேசுவது போன்ற நிகழ்ச்சி,
(11)சுற்றுச்சூழல் பேசுவது
(12)நடையும் மிதிவண்டியும் பேசுவது,
(13)வேகத்தடை பேசுவது,வேகக்கட்டுப்படுத்தி(SPEED HUMPS & TRAFFIC BARRIERS)
(14)பாதசாரிகள் நடைபாதை பேசுவது
என நாடக வடிவில் விழிப்புரை கொடுக்கலாமா? என திட்டமிட்டு வருகிறோம்.






செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வாகனங்களும், சாலை விதிகளும் காற்றாய் பறந்தன!: சாலை பாதுகாப்பு வாரம், விழலுக்கு இறைத்த நீர்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்தில் தற்போது  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறை மற்றும் லோகு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி இவற்றுடன் இணைந்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு கொடுக்க முடிவெடுத்து முதல் கட்டமாக தற்போது தாளவாடி மலைப்பகுதியிலுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கொடுத்துள்ளோம்..மேலும் விவரங்களுக்கு எங்களை அணுகவும்.
  

கீழே பதிவிட்டுள்ள கட்டுரை தி இந்து நாளிதழில் ஜனவரி16,2014ல் வெளிவந்த கட்டுரை...
              விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கும் சாலை பாதுகாப்பு வாரம் இவ்வாண்டும் கடந்து சென்றுவிட்டது. ஆனால், வழக்கம்போல் வாகனங்கள் சிட்டாய் பறக்க, போக்குவரத்து விதிகள் காற்றில் பறந்தன. பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம், `சாலை பாதுகாப்பு வாரமா’க அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.40 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்று சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். `விபத்தினால் வருவது துன்பம், பாதுகாப்பினால் வருவது இன்பம்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவ்வாண்டுக்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் எமன், சித்ரகுப்தன் வேடமிட்டு விழிப்புணர்வு நாடகமும், பேரணிகள், வாகன பேரணிகள், வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது என்றெல்லாம் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தேறின.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோர் விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர். கல்வி நிலையங்களில் மாணவர், மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொல்லப்பட்ட கருத்துகள் மக்களை சென்றடைந்தனவா? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா? என்பது சந்தேகம்தான். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டிருந்தால் விதிமீறல்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
புதன்கிழமை காணும் பொங்கல் தினத்தன்று இருசக்கர வாகனங்களில், அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததை புதன்கிழமை காணமுடிந்தது. ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் புளிமூட்டையை திணிப்பதுபோல் பயணிகளை அடைத்துச் சென்றனர். இதையெல்லாம் போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்ளவில்லையே.
கண்டு கொள்ளாதது ஏன்?
சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது நல்லதுதான். ஆனால் விபத்துகளுக்கு காரணமான குண்டும் குழியுமான சாலைகள், சிறுபாலங்கள், வேகத்தடைகள் குறித்து யாராவது கண்டுகொண்டார்களா? என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களை கண்டறிந்து, அங்கு சாலைகள், பாலங்கள், சிறுபாலங்கள் ஆகியவற்றை அகலப்படுத்துதல், வேகத்தடைகள் ஏற்படுத்துதல், போதுமான மின்விளக்கு வசதிகளை அமைத்தல், சாலை சந்திப்புகளில் அடையாள குறியீடுகளை காட்டும் பலகைகளை ஏற்படுத்துதல், சாலை வளைவுகளை நேர்செய்தல் என பல்வேறு தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அரசுத்துறை அதிகாரிகளும் அறிக்கை விட்டுவிட்டு சும்மா இருந்துவிடுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்று சொல்கிறோம். காரணம், பாதுகாப்பு இல்லாத சாலையில் , பாதுகாப்பு இல்லாத பயணங்களால் பாதுகாப்பு இல்லாத மனிதர்களுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை மரணமாக உள்ளது. வாகனம் ஓட்டிய சிறுவன் அல்லது சிறுமி, வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 3, 4, 5 பிரிவுகளின்படி வழக்கு பதிய வேண்டும். ஆனால், பெற்றோருக்கு தெரிந்து அல்லது தெரியாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டுகின்றனர். இதை தடுக்க முடியாமல் அரசுத்துறைகள் இருக்கின்றன.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும். போக்குவரத்து விதிகளை சரியா்க கடைபிடிக்கும் அப்பாவி மனிதர், விதிகளை மீறும் நண்பரால் விபத்தில் இறக்கிறார். விழிப்புணர்வு இல்லை என்று நாமே நம்மை ஏமாற்றி கொள்வதுதான் தொடர்கிறது. 
தி இந்து நாளிதழுக்கு நன்றி.

அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்கும் இலவச திட்ட உதவிகள் பரப்புரை கலைநிகழ்ச்சி...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். 09.02.2015திங்கட்கிழமை இன்று நம்ம தாளவாடி பேருந்து நிலையத்தில் மதியம் 2.00மணியளவில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பாக அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கு வழங்கும் இலவச திட்டங்கள் பற்றிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சில காட்சிகள் தங்களுடைய பார்வைக்காக..
















முகநூல் பயனாளர்கள் உசாருங்க....இது ஒரு எச்சரிக்கைப் பதிவு...

        மரியாதைக்குரியவர்களே,வணக்கம். உங்க முகநூல் கணக்கு உசாருங்க.....உடனே படியுங்க,பகிருங்க...  உசாருங்க..உசாரு...உங்க முகநூல் கணக்கு உசாரு..     தற்போது பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.

# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when anyone logs into your account from a new device or browser. -> அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம். Settings -> Security Settings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள் டைம்லைனில் தெரியாது. Settings -> Timeline and Tagging Settings -> who can add things to my timeline? -> Review posts friends tag you in before they appear on your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் அவர்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ, அந்த பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை. ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற முடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை ஹாக் செய்வதாக தெரிகிற்து. முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில் ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே History Cleaning செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும் பயன்படுத்தலாம். நன்றி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி- ஈரோடு மாவட்டத்தில்...

 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.ஆண்டு முழுவதும் நம்ம ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக...
                    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச கல்வி ...பள்ளி & கல்லூரி இருபால் மாணவர்களுக்கான பாதுகாப்பு பயிலரங்கம்.



     நம்ம ஈரோட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருடம் முழுவதும் கொடுக்க திட்டமிடப்பட்டு அதன் முதல் கட்டமாக தாளவாடி மற்றும் சத்தி ஒன்றியங்களில் கல்வி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.அதன் தொகுப்பில் சில பகுதிகள் தங்களது பார்வைக்காக...
        திரு.C.பரமேஸ்வரன் அவர்களுக்கு 09.02.2015 திங்கட்கிழமை காலையில் புனிதமான பணியாம் தேசியக் கொடி ஏற்றிவைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரை வழங்க வாய்ப்பளித்த தாளவாடி-சூசைபுரத்திலுள்ள புனித ஜோசப் மேனிலைப் பள்ளிக்கு நன்றிகள் பல....

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்வை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது வருகை புரிந்து பெருமை சேர்த்த சான்றோர்களில் சிலர்......
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஈரோடு மண்டலம் தாளவாடி கிளை மேலாளர் அவர்களது வழிகாட்டுரை.....
 திரு.V.மகேஷ்  அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியபோது....
 வட்டார வள மையம் சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கிய மேற்பார்வையாளர் அவர்கள்..
 சத்தியமங்கலம் ரங்க சமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் லோகு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் திரு.K.லோகநாதன் அவர்களது வழிகாட்டுரை...
 CCF -THALAVADI ஆஷாகேந்திரா குழந்தைகள் நல உதவி மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கவுரையின்போது....

 அரசு மேல்நிலைப் பள்ளி-தாளவாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளி-தலமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....



புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி-திகனாரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 புனித ஜோசப் மேனிலைப் பள்ளி-சூசைபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது...
நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 இன்னும் தொடரும்..இலவசமாக..என சமூக நலன் கருதி...அன்பன்,