செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

வாகனங்களும், சாலை விதிகளும் காற்றாய் பறந்தன!: சாலை பாதுகாப்பு வாரம், விழலுக்கு இறைத்த நீர்

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வு நோக்கத்தில் தற்போது  நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பு  சத்தியமங்கலம் போக்குவரத்து காவல்துறை மற்றும் லோகு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி இவற்றுடன் இணைந்து தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.ஈரோடு மாவட்டத்தின் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு கொடுக்க முடிவெடுத்து முதல் கட்டமாக தற்போது தாளவாடி மலைப்பகுதியிலுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு கொடுத்துள்ளோம்..மேலும் விவரங்களுக்கு எங்களை அணுகவும்.
  

கீழே பதிவிட்டுள்ள கட்டுரை தி இந்து நாளிதழில் ஜனவரி16,2014ல் வெளிவந்த கட்டுரை...
              விபத்துகளைத் தடுக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் அனுசரிக்கும் சாலை பாதுகாப்பு வாரம் இவ்வாண்டும் கடந்து சென்றுவிட்டது. ஆனால், வழக்கம்போல் வாகனங்கள் சிட்டாய் பறக்க, போக்குவரத்து விதிகள் காற்றில் பறந்தன. பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரம், `சாலை பாதுகாப்பு வாரமா’க அரசால் கடைப்பிடிக்கப்படுகிறது.
பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சாலை விபத்துகளை தவிர்க்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு சாலை பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.40 கோடியை அரசு ஒதுக்கி உள்ளது என்று சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி முதல்வர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருந்தார். `விபத்தினால் வருவது துன்பம், பாதுகாப்பினால் வருவது இன்பம்’ என்ற கருத்தை மையப்படுத்தி, இவ்வாண்டுக்கான நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தி முடிக்கப்பட்டிருந்தன. திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் எமன், சித்ரகுப்தன் வேடமிட்டு விழிப்புணர்வு நாடகமும், பேரணிகள், வாகன பேரணிகள், வாகன முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டுவது என்றெல்லாம் பல்வேறு நிகழ்வுகளும் நடந்தேறின.
வட்டார போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து போலீஸார் உள்ளிட்டோர் விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள், பாதசாரிகள் கடைபிடிக்க வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை விநியோகித்தனர். கல்வி நிலையங்களில் மாணவர், மாணவியருக்கு பேச்சு, கட்டுரை போட்டிகளும் நடத்தப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில் சொல்லப்பட்ட கருத்துகள் மக்களை சென்றடைந்தனவா? அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதா? என்பது சந்தேகம்தான். விழிப்புணர்வு உருவாக்கப்பட்டிருந்தால் விதிமீறல்கள் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறில்லாமல் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
புதன்கிழமை காணும் பொங்கல் தினத்தன்று இருசக்கர வாகனங்களில், அளவுக்கு அதிகமானோர் பயணம் செய்ததை புதன்கிழமை காணமுடிந்தது. ஆட்டோ உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் புளிமூட்டையை திணிப்பதுபோல் பயணிகளை அடைத்துச் சென்றனர். இதையெல்லாம் போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்ளவில்லையே.
கண்டு கொள்ளாதது ஏன்?
சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது நல்லதுதான். ஆனால் விபத்துகளுக்கு காரணமான குண்டும் குழியுமான சாலைகள், சிறுபாலங்கள், வேகத்தடைகள் குறித்து யாராவது கண்டுகொண்டார்களா? என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது. அடிக்கடி விபத்துகள் நிகழும் இடங்களை கண்டறிந்து, அங்கு சாலைகள், பாலங்கள், சிறுபாலங்கள் ஆகியவற்றை அகலப்படுத்துதல், வேகத்தடைகள் ஏற்படுத்துதல், போதுமான மின்விளக்கு வசதிகளை அமைத்தல், சாலை சந்திப்புகளில் அடையாள குறியீடுகளை காட்டும் பலகைகளை ஏற்படுத்துதல், சாலை வளைவுகளை நேர்செய்தல் என பல்வேறு தீர்வு காணும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக அரசுத்துறை அதிகாரிகளும் அறிக்கை விட்டுவிட்டு சும்மா இருந்துவிடுகிறார்கள்.
சாலை பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என்று சொல்கிறோம். காரணம், பாதுகாப்பு இல்லாத சாலையில் , பாதுகாப்பு இல்லாத பயணங்களால் பாதுகாப்பு இல்லாத மனிதர்களுக்கு கிடைக்கும் அதிக பட்ச தண்டனை மரணமாக உள்ளது. வாகனம் ஓட்டிய சிறுவன் அல்லது சிறுமி, வாகன உரிமையாளர் மற்றும் வாகனம் மீது இந்திய மோட்டார் வாகனச் சட்டம் 3, 4, 5 பிரிவுகளின்படி வழக்கு பதிய வேண்டும். ஆனால், பெற்றோருக்கு தெரிந்து அல்லது தெரியாமல் சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஒட்டுகின்றனர். இதை தடுக்க முடியாமல் அரசுத்துறைகள் இருக்கின்றன.
சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும். போக்குவரத்து விதிகளை சரியா்க கடைபிடிக்கும் அப்பாவி மனிதர், விதிகளை மீறும் நண்பரால் விபத்தில் இறக்கிறார். விழிப்புணர்வு இல்லை என்று நாமே நம்மை ஏமாற்றி கொள்வதுதான் தொடர்கிறது. 
தி இந்து நாளிதழுக்கு நன்றி.

அனைவருக்கும் கல்வி இயக்கம் வழங்கும் இலவச திட்ட உதவிகள் பரப்புரை கலைநிகழ்ச்சி...

மரியாதைக்குரியவர்களே,
             வணக்கம். 09.02.2015திங்கட்கிழமை இன்று நம்ம தாளவாடி பேருந்து நிலையத்தில் மதியம் 2.00மணியளவில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் சார்பாக அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கு வழங்கும் இலவச திட்டங்கள் பற்றிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.அதில் சில காட்சிகள் தங்களுடைய பார்வைக்காக..
















முகநூல் பயனாளர்கள் உசாருங்க....இது ஒரு எச்சரிக்கைப் பதிவு...

        மரியாதைக்குரியவர்களே,வணக்கம். உங்க முகநூல் கணக்கு உசாருங்க.....உடனே படியுங்க,பகிருங்க...  உசாருங்க..உசாரு...உங்க முகநூல் கணக்கு உசாரு..     தற்போது பலருடைய முகநூல் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டு வருகிறது. ஹாக் செய்பவர்கள் உங்கள் டைம்லைனில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள அனைவருக்கும் டாக் செய்கிறார்கள். ஒன்றல்ல இரண்டல்ல நூற்றுக்கணக்கான விடியோக்கள் டைம்லைனில் பதிவாகிறது. இதை எதோ ஹாக் ப்ரோக்ராம் கொண்டு நடத்துகிறார்கள். (இந்த ஹாக் செய்பவர்கள் லிங்க் கொடுக்கும் வெப்சைட் புரியாத வெளிநாட்டு மொழியில் உள்ளது.)
இதனை ஓரளவேனும் தவிர்க்க நீங்கள் செய்யவேண்டியது என்ன..!
# முதலில் உங்கள் முகநூல் கணக்கை BACKUP செய்துகொள்ளுங்கள்.
Settings -> General -> க்கு கீழே உள்ள லிங்க் Download a copy of your Facebook data. மூலம் BACKUP செய்துகொள்ளுங்கள்.

# Settings -> Security Settings -> Login Alerts -> Get an alert when anyone logs into your account from a new device or browser. -> அனைத்து Notificationsம் வருவது போல செட்டிங் செய்து கொள்ளுங்கள்.
# இது மிகவும் முக்கியம். ஒருவேளை உங்கள் கணக்கு ஹாக் செயப்பட்டால் இந்த நண்பர்கள் மூலம் திரும்ப பெறலாம். Settings -> Security Settings -> Trusted Contacts -> இதில் ஐந்து நண்பர்கள் வரைக்கும் தேர்வு செய்ய முடியும். உங்களுக்கு நெருக்கமான, கம்ப்யூட்டர் சற்று நன்கு தெரிந்த ஐந்து நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.
# இந்த செட்டிங் உங்கள் அனுமதி இல்லாமல் யார் டாக் செய்த பதிவும் உங்கள் டைம்லைனில் தெரியாது. Settings -> Timeline and Tagging Settings -> who can add things to my timeline? -> Review posts friends tag you in before they appear on your timeline? -> ENABLED.
# குறிப்பாக அறிமுகம் இல்லாத மொழியில் வரும் வெளிநாட்டு நட்பு அழைப்புகளை ஏற்கவேண்டாம்.
NEW UPDATE:
ஹாக் செய்யப்பட முகநூல் நண்பர்களிடம் அவர்களுடைய கம்ப்யூட்டரில் இருந்து அவர்களால் முகநூலில் இருந்து Log-out செய்யவோ, அந்த பதிவுகளை நீக்கவோ, அல்லது சில மாற்றங்களை செய்யவோ அனுமதிக்கவில்லை. ஆனால், வேறொரு கம்ப்யூட்டரில் இருந்து அனைத்து செட்டிங்ஸ்ம் மாற்ற முடிகிறது. எனவே ஹாக்கர் உங்கள் Browser Cookies மூலமே உங்கள் கணக்கை ஹாக் செய்வதாக தெரிகிற்து. முடிந்த அளவு Browser Settingsல் Remember password எடுத்து விடவும். மேலும், ஒவ்வொரு முறையும் ப்ரௌசெரை விட்டு வெளியேறும்போது Clear History கொடுத்து Browser Cookies உட்பட அழித்துவிடவும். சில ப்ரௌசெர்களில் ஒவ்வொரு முறையும் நாம் வெளியேறும் போது தானாகவே History Cleaning செயும்படி இருக்கிறது. முடிந்த அளவு அதையும் பயன்படுத்தலாம். நன்றி.

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி- ஈரோடு மாவட்டத்தில்...

 மரியாதைக்குரியவர்களே,
                வணக்கம்.ஆண்டு முழுவதும் நம்ம ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக...
                    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு இலவச கல்வி ...பள்ளி & கல்லூரி இருபால் மாணவர்களுக்கான பாதுகாப்பு பயிலரங்கம்.



     நம்ம ஈரோட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் வருடம் முழுவதும் கொடுக்க திட்டமிடப்பட்டு அதன் முதல் கட்டமாக தாளவாடி மற்றும் சத்தி ஒன்றியங்களில் கல்வி கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.அதன் தொகுப்பில் சில பகுதிகள் தங்களது பார்வைக்காக...
        திரு.C.பரமேஸ்வரன் அவர்களுக்கு 09.02.2015 திங்கட்கிழமை காலையில் புனிதமான பணியாம் தேசியக் கொடி ஏற்றிவைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரை வழங்க வாய்ப்பளித்த தாளவாடி-சூசைபுரத்திலுள்ள புனித ஜோசப் மேனிலைப் பள்ளிக்கு நன்றிகள் பல....

 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்வை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றபோது வருகை புரிந்து பெருமை சேர்த்த சான்றோர்களில் சிலர்......
 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் ஈரோடு மண்டலம் தாளவாடி கிளை மேலாளர் அவர்களது வழிகாட்டுரை.....
 திரு.V.மகேஷ்  அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் அவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி துண்டுப் பிரசுரங்கள் வழங்கியபோது....
 வட்டார வள மையம் சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கிய மேற்பார்வையாளர் அவர்கள்..
 சத்தியமங்கலம் ரங்க சமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் லோகு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி உரிமையாளர் திரு.K.லோகநாதன் அவர்களது வழிகாட்டுரை...
 CCF -THALAVADI ஆஷாகேந்திரா குழந்தைகள் நல உதவி மையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி விளக்கவுரையின்போது....

 அரசு மேல்நிலைப் பள்ளி-தாளவாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு மேல்நிலைப் பள்ளி-பனகஹள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு உயர்நிலைப் பள்ளி-சிக்கள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர் நிலைப் பள்ளி-தலமலையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....



புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி-திகனாரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 புனித ஜோசப் மேனிலைப் பள்ளி-சூசைபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது...
நகராட்சி உயர்நிலைப் பள்ளி-ரங்கசமுத்திரம்-சத்தியமங்கலத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கல்வி விளக்கவுரையின்போது....
 இன்னும் தொடரும்..இலவசமாக..என சமூக நலன் கருதி...அன்பன்,


GOVT.HIGHER SECONDARY SCHOOL-THALAVADI


 SAFETY IS NOT JUST A SLOGAN IT IS A WAY OF LIFE -201
 சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல,-அது வாழ்க்கை முறை.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம்.நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம் -தமிழ்நாடு வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.
  05.02.2015 இன்று மாலை 3.00மணிக்கு தாளவாடியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.


 வரவேற்புரை;திரு. நாகநாதன் அவர்கள்,பட்டதாரி ஆசிரியர்,


தலைமை ஏற்று உரை;
                 திருமதி.மல்லிகா M.A.,M.Ed.,M.Phill அவர்கள், தலைமையாசிரியை







               விளக்கவுரை;திரு.C.பரமேஸ்வரன் அவர்கள்,செயலாளர்,நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.





            புகைத்தலின் தீங்கு பற்றிய விளக்கம்; திரு. சிவக்குமார் அவர்கள்,கணித ஆசிரியர்,


நன்றியுரை; திரு.ஆர். பாலுராஜன் அவர்கள்,முதுநிலை பட்டதாரி ஆசிரியர்.உடன் இருப்பவர் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பரமேஸ்வரன் அவர்கள் .........

வட்டார வள மையம் -சத்தியமங்கலம்-2015 SARVA SIKSHA ABHIAN


                          SAFETY IS NOT JUST A SLOGAN IT IS WAY OF LIFE
           சாலை பாதுகாப்பு -வாசகம் அல்ல, -அது வாழ்க்கைமுறை.

                          SARVA SKISHA ABHIYAN - SATHYAMANGALAM-638402

 மரியாதைக்குரியவர்களே,
                           வணக்கம்.இன்று மாலை 3.00மணியளவில் சத்தியமங்கலம் வட்டார வள மைய அலுவலகத்தில்  இருபால் ஆசிரியர் பயிற்சிக் கூட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது.

வரவேற்புரை;
           திருமதி, C.சில்வியா ஞானரத்தினம் B.A.,B.Ed., அவர்கள்,
                            IED SPECIAL TEACHER 
                           வட்டார வள மையம்-
                             சத்தியமங்கலம் .


தலைமை ஏற்று உரை;
         திருமதி,வினித்தா சோபியா M.A.,B.Ed.,அவர்கள் 
                                மேற்பார்வையாளர்,    
              வட்டார வளமையம், சத்தியமங்கலம்.
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
 புகைத்தலின் தீங்குகள் பற்றிய செயல் விளக்கம்........
  திருமதி,மேற்பார்வையாளர் அவர்கள் பாராட்டுரை வழங்கிய காட்சி...
     சாலை பாதுகாப்பு கல்வி விழிப்புணர்வு
        கருத்துரை;C.பரமேஸ்வரன் அவர்கள்,
           செயலாளர்,
   நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு.

நன்றியுரை;
            திருமதி, மரியா தவமணி அவர்கள்,
                           தலைமை ஆசிரியை,பண்ணாரி.
தொடர்பு கொள்ள வேண்டிய செயலாளர் கை பேசி எண், 9585600733